Sunday 19th of May 2024 07:23:54 PM GMT

LANGUAGE - TAMIL
-
இணைய வழி சிறுவா் துஷ்பிரயோகம்  கொவிட்-19 முடக்கல் காலத்தில் அதிகரிப்பு!

இணைய வழி சிறுவா் துஷ்பிரயோகம் கொவிட்-19 முடக்கல் காலத்தில் அதிகரிப்பு!


கொவிட்-19 தொற்று நோய் நெருக்கடியால் சமூக முடக்கல் கட்டுப்பாடுகள் கடுமையாக அமுல் செய்யப்பட்ட காலப்பகுதியில் இணையதள மூலமான சிறுவா் பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக ஐரோப்பிய ஒன்றிய சட்ட அமுலாக்க நிறுவனத்தின் இயக்குனர் கத்தரின் டி போலி (Catherine De Bolle) கூறியுள்ளாா்.

குறிப்பாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் சிறுவா் பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக அவா் தெரிவித்தாா்.

பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படுவதால் பிள்ளைகள் மீதான கண்காணிப்பை ஆசிரியர்கள் தீவிரப்படுத்துவார்கள். இதனால் இது குறித்து மேலும் அதிகமான தகவல் வெளிவரக்கூடும் என ஐரோப்பிய ஒன்றிய சட்ட அமுலாக்க நிறுவனம் தெரிவித்துள்ளது.

கொவிட் தொற்று பரவிய காலத்தில் அதிகமானோர் இணையத்தின் மூலம் வேலை செய்ய வேண்டிய மற்றும் கடைகளில் பொருட்களை வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதன்மூலம் அவர்கள் சிறார் பாலியல் தொடர்பான இணையத்தள வசதிகளுக்கு செல்வதற்கான வாய்ப்புகளை அதிகமாக பெற்றுக்கொள்ளும் நிலை ஏற்பட்டது என கத்தரின் டி போலி சுட்டிக்காட்டினார்.


Category: உலகம், புதிது
Tags: உலகம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE